உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழக பகுதிக்கு கடத்த இருந்த சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

தமிழக பகுதிக்கு கடத்த இருந்த சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

புதுச்சேரி : தமிழக பகுதிக்கு கடத்த இருந்த 160 லிட்டர் கொண்ட சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியில் லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் மதுபானங்களை கடத்துவதை தடுக்க தீவிரமாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மதகடிப்பட்டு பகுதியில், தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்துவதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள சாராய கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு சாராய கடையில், கணக்கிற்கு மீறி அதிக அளவில் சாராய பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.மேலும், விசாரணை செய்ததில், தமிழக பகுதிக்கு 160 லிட்டர் அளவு கொண்ட சாராய பாக்கெட்டுகள் கடத்த இருந்ததை போலீசார் பறிமுதல்,செய்து, கலால் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பல சாராயக்கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ