உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சித்ரா பவுர்ணமியையொட்டி நாளை பால்  அபிேஷகம்

சித்ரா பவுர்ணமியையொட்டி நாளை பால்  அபிேஷகம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில், 25ம் ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி, 108 பால் குட அபிேஷகம் நாளை நடக்கிறது.நெட்டப்பாக்கம் பர்வதவர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்னமியையொட்டி, மணலிப்பட்டு சைவத்திருமடம் குருமுதல்வர் வாமதேவசிவ குமாரசாமி தேசிகப் பரமாச்சார்யா சுவாமிகள் தலைமையில், காலை 8:30 மணிக்கு நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் இருந்து 108 பால் குட ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலம் கோவிலுக்கு சென்று காலை 10:40 மணியளவில், பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம், 108 பால்குட அபிேஷகம் நடக்கிறது. மதியம் 12:15 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி