உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் பாலியேடிவ் ஆதரவு மருத்துவ சேவை

இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் பாலியேடிவ் ஆதரவு மருத்துவ சேவை

புதுச்சேரி : இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பாலியேடிவ் ஆதரவு மருத்துவ சேவை தொடக்க விழா மற்றும் பயிலரங்கம் நடந்தது.இந்திர காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த விழாவை, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு துவக்கி வைத்தார். மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயசங்கர், டீன் ராமசந்திர வி பட், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேஷ், ஐ.பி.எம், காலிகட் மற்றும் சன்ஜீவன் இயக்குனர் சுரேஷ்குமார், சமூக மருத்துவத்துறை தலைவர் கவிதா, மயக்க மருந்தியல் துறை தலைவர் பிரதீபா உட்பட கல்லுாரி பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். இவ்விழாவை, தொடர்ந்து ஆதரவு மருத்துவ சேவையில் வலி போக்கும் முறைகள் தொடர்பான பயிலரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கபட்டது.பேராசிரியர் ரமாதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி