| ADDED : ஜூன் 15, 2024 05:13 AM
புதுச்சேரி: பஸ் நிலையம் மாற்றத்தால், புதுச்சேரி - கடலுார் சாலையில் வாகனங்கள் நிறுத்த நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் பஸ் நிலையம் ஏ.எப்.டி., மைதானத்திற்கு நாளை இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதையடுத்து புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையிலிருந்து ரயில்வே கேட் வரையில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பஸ் நிலையம் கட்டுமான பணிகள் முடியும் வரை அனைத்து வழித்தட பஸ்களும் ஏ.எப்.டி., மைாதனத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. எனவே, நாளை முதல் ஏ.எப்.டி., மைாதனத்தில் இயங்கும் பஸ் நிலையத்தை பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.