| ADDED : ஏப் 12, 2024 04:29 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் வருமான வரித்துறையால், லோக்சபா தேர்தலைமுன்னிட்டு, 24 மணி நேரமும் செயல்படும், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒரு தனி நபர் அல்லது கட்சி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது, பற்றிய புகார்களை தகவல்களை தெரிவிக்க விரும்பினால், வருமான வரி அலுவலகத்தில் உள்ள கட்டணம் இல்லா தொலைபேசி எண், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்காக, கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதற்கான மொபைல் எண்கள்: 9894560298, 8547000931. மேலும், தகவலை பகிர்ந்து கொள்பவர்கள் பெயர்கள் மற்றும் விவரங்கள், ரகசியமாக வைக்கப்படும். கட்டணம் இல்லா தொலைபேசி எண் - 1800 425 6669; இமெயில் - tn.incometax.gov.in; வாட்ஸ் அப் எண்: 94453 94453இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.