மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதி பொது இடத்தில் குப்பைகளை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என, ஆணையர் எழில்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் இயங்கும் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் உருவாகும் குப்பைகளை சாலையோரங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளில் போடாமல் பொது இடங்களில் போட்டால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு நோட்டீசை கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் திருக்கனுார் பஜார் வீதியில் உள்ள கடைகள், ஓயின் ஷாப் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடம் வழங்கினார்.அதில், மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து பைகளில் சேகரித்து, தங்கள் பகுதிகளில் குப்பை சேகரிக்கும் ஹெச். ஆர். ஸ்கொயர் நிறுவன ஊழியர்களிடம் வழங்க வேண்டும். சாலையோரங்கள், சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டைகளில் போடக்கூடாது.தங்கள் பகுதிகளில் குப்பை சேகரிக்க ஊழியர்கள் சரிவர வரவில்லை என்றாலோ, குப்பைகளை குறித்த நேரத்தில் வாங்காமல் இருந்தலோ உடனடியாக கொம்யூன் பஞ்சாயத்து கட்டுப்பாட்டு அறை 0413-2640161 மற்றும் 9345705088 என்ற வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டால் குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துடன் இணைந்து குப்பைகளை பொது இடத்தில் போடாமல், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிப்பதுடன், கொம்யூன் பஞ்சாயத்து வணிக உரிமம் ரத்து செய்யப்படும்' என்றார்.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago