உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி : லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் பேனர் வைக்க தடை உள்ளது. ஆனால் தடையை மீறி பல இடங்களில் பேனர்கள் வைக்கப்படுகிறது. இந்நிலையில், சப்கலெக்டர் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன் நேற்று முன்தினம் தனது எல்லைக்கு உட்பட்ட லாஸ்பேட்டை மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றார்.அங்கு உரிய அனுமதி இன்றி சாலை மற்றும் நடைபாதையில் பேனர், ஹோர்டிங் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக புகைப்படத்துடன், லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் பேனர் வைத்த மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை