உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 8ம் வகுப்பு மாணவி திடீர் சாவு போலீசார் விசாரணை

8ம் வகுப்பு மாணவி திடீர் சாவு போலீசார் விசாரணை

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் காய்ச்சல் ஏற்பட்டு 8ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், வி.பி.சிங். நகர், காந்தி வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 46; தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு மீரா, 17; சுபிக் ஷா, 13; என இரு மகள்கள். இளைய மகள் சுபிக் ஷா,அங்குள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்புபடித்து வந்தார்.கடந்த 11ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுபிக் ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அன்று வீட்டில் இருந்த காய்ச்சல் மாத்திரை கொடுத்தனர். மறுநாள் காலை காய்ச்சல் அதிகரித்ததால் சுபிக் ஷா பள்ளிக்கு செல்லவில்லை.அன்று மதியம் 3:00 மணி முதல் தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தார், மாலையில் அங்குள்ள தனியார் கிளினிக் டாக்டரிடம் சுபிக் ஷாவை காண்பித்தனர். அங்கிருந்த டாக்டர் கதிர்காமம் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தார்.இரவு 10:00 மணிக்கு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரிக்கு அழைத்து சென்றனர். சிறுமிக்கு ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக கூறி சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம் சீராகவில்லை. மேலும், இ.சி.ஜி.யும் சீராக இல்லாததால் நள்ளிரவு 2:30 மணியளவில் மேல் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு கொண்டு செல்லும் வழியில் சுபிக் ஷா,பரிதாபமாக உயிரிழந்தார்.சிறுமி இறப்பிற்கான காரணம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்