மேலும் செய்திகள்
சிகிச்சை பலனின்றி இறந்தவர் யார்? விசாரணை
07-Jul-2026
புதுச்சேரி: புதுச்சேரி பஸ் நிலையத்தில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி பஸ் நிலையத்தில் கடந்த 20ம் தேதி அடையாளம் தெரியா நபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Jul-2026