உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவி மாயம் போலீசார் விசாரணை

மாணவி மாயம் போலீசார் விசாரணை

புதுச்சேரி: பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவியை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.புதுச்சேரி, பாக்கமுடையான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி; நகரப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அவர், பெற்றோரிடம் தோழிகளுடன் பாண்டி மெரினாவுக்கு பிறந்தநாள் கொண்டாடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணிக்கு சென்றார். ஆனால், வெகு நேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பவில்லை.இதையடுத்து, பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர், கிடைக்கவில்லை. இதுகுறித்து கோரிமேடு போலீசில் பெற்றோர், புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி