உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவித்திறன் குறித்து செய்முறை பயிற்சி

செவித்திறன் குறித்து செய்முறை பயிற்சி

புதுச்சேரி: அரசு பொது மருத்துவமனையில், செவித்திறன் மேம்படுத்துதல் தொடர்பான மாதிரி அறுவை சிகிச்சை செய்முறை பயிற்சி நடந்தது. அரசு சுகாதார இயக்கத்தின் தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டம் மற்றும் இந்திரகாந்தி அரசு மருத்துவமனை இணைந்து, செவித்திறன் மேம்படுத்துதல் தொடர்பான மாதிரி அறுவை சிகிச்சை செய்முறை பயிற்சியை நடத்தியது.அரசு பொது மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த பயிற்சியை, அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்தார். குறை தீர்ப்பு அதிகாரி ரவி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து, 60க்கும் மேற்பட்ட காது, மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர்கள் பங்கேற்றனர். செய்முறை பயிற்சியும், வழிகாட்டுதல் அளித்தனர். முகாமில், தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில தலைமை அதிகாரி ஸ்டாலின் சிவகுருநாதன் மற்றும் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ