பிரிமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணியின் வீரர்களுக்கு விருது
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில், பாண்டிச்சேரி பிரிமியர் டி-20 லீக் மற்றும் நாக்கவுட் கிரிக்கெட் போட்டி, புதுச்சேரி போலீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. கடந்த 31ம் தேதி வீராம்பட்டினம் அபீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 5வது போட்டியில், திருவாண்டார்கோவில் டைட்டன்ஸ் அணி, உப்பளம் ராயல்ஸ் அணியும் மோதின.இதில் உப்பளம் ராயல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் மூர்த்திக்கு ஆட்டநாயகன் விருதினை ஆய்வாளர் ரமேஷ் வழங்கினார்.6வது போட்டியில் கோரிமேடு பேந்தர்ஸ் அணி, குமாரபாளையம் வாரியர்ஸ் அணி மோதியது. கோரிமேடு பேந்தர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட் எடுத்த பிரபுக்கு ஆட்டநாயகன் விருதினை துணை ஆய்வாளர் பூபதி வழங்கினார்.நேற்று நடந்த 7 வது போட்டியில் வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி, லாஸ்பேட் லிஜன்ஸ் அணி மோதின. முதலில் விளையாடிய வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கவுதமுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 8வது போட்டியில் மூலகுளம் கிளாடியேட்டர்ஸ் அணி, உருளையன்பேட் டைகர்ஸ் அணி மோதின. மூலகுலம் கிளாடியேட்டர்ஸ் கிரிக்கெட் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் முரளிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகர், நிர்வாகிகள் கணேஷ், முகிலன், குமாரவேல், கதிர்வேல் ஆகியோர் செய்திருந்தனர்.