உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கல்லுாரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் கல்லுாரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாகூர்: கிருமாம்பாக்கம் தனியார் பொறியியல் கல்லுாரி ஊழியர்கள், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியில் மற்றும் தொழிற்நுட்ப கல்லுாரி ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 3ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நேற்று பிள்ளையார்குப்பம் சந்திப்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கதிரேசன் தலைமை தாங்கினார்.கந்தன், ராமஜெயம், வீரசெல்வம், அமுதா, ஜெயந்தி, வள்ளி, மின்னலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாநில நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், மாநில தலைவர் பிரபுராஜ், சீனிவாசன், தினேஷ், கலியன், சரவணன், குப்புசாமி, இளவரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை