| ADDED : ஏப் 01, 2024 06:45 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் தேக்வோண்டோ விளையாட்டு தேர்வில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, 'கலர் பெல்ட்' பரிசாக வழங்கப்பட்டது.புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்கம் சார்பாக சமீபத்தில் 'கலர் பெல்ட்' தேர்வு, சங்கத்தின் டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் பகவத்சிங் தலைமையில் நடந்தது. இதில், தேவி தேர்வாளராக, நியமிக்கப்பட்டார். இந்த தேர்வில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, கலர் பெல்ட் வழங்கும் விழா, லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், 'கே7 ஸ்போர்ட்ஸ் ஹப்'பில், நடந்தது.இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், கலந்து கொண்டனர். மணக்குள விநாயகர் கல்விக்குழும செயலாளர் நாராயணசாமி கேசவன் மற்றும் புதுச்சேரி தேக்வோண்டா விளையாட்டு சங்க நிறுவனர் ஸ்டாலின், சிறப்பு அழைப்பாளர்களாக, கலந்து கொண்டனர். மேலும், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, கலர் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.இதில், 'கே7 ஸ்போர்ட்ஸ் ஹப்' நிர்வாக இயக்குனர்கள் அஸ்வின் மற்றும் அஜய், தேக்வோண்டோ சங்க செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் அரவிந்த், அமைப்பு செயலாளர் நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிலம்பரசன் மேற்கொண்டார்.