| ADDED : ஜூலை 29, 2024 05:02 AM
புதுச்சேரி : புதுச்சேரி கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கத்தின் சார்பில், அனைவருக்கும் இணையம் என்பதை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.ஊர்வலம், ராஜா தியேட்டரில் துவங்கி, அண்ணா சிலை வரை சென்றது. தொடர்ந்து, அண்ணா சிலை அருகில் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடந்தது. அதில், கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச பைபர் இணைப்பு வழங்குதல், புதுச்சேரியில் ஐ.டி., பார்க் அமைக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல்லுாரியில் அதிவேக இணைய சேவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகள் வலியுறுத்தி பிரசாரம் செய்தனர்.நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவர் ராகுல்காந்த, செயலாளர் கமலவேலன், பொருளாளர் அர்ஜூன், நிர்வாகிகள் கணேஷ், நுாருதீன், தினேஷ், மணிராஜ், தாமோதரன், தமிழக கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் தலைவர் பிரசன்னா வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.