மேலும் செய்திகள்
கருணாநிதி நினைவு நாள் விழா
08-Aug-2024
புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி திலகர் வீதியில் பேராசிரியர் கபாலி(எ) ராஜகோபால் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், புதுச்சேரி சபாநாயகர் செல்வம், தட்சணாமூர்த்தி (எ) பாஸ்கர் எம்.எல்.ஏ., பங்கேற்று, பேராசிரியர் ராஜகோபால் உருவப் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில், அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன், ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன், அரிச்சுவடி டிரஸ்டி அரசமாதேவி ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நிகழ்ச்சியில், ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டியின் முன்னாள் தலைவர் சதீஷ்குமார், புருஷோத்தம்மன், இளங்கோ, கலைச்செல்வி உள்ளிட்ட உறவினர்கள், அரிச்சுவடி மற்றும் ஆத்திச்சூடி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
08-Aug-2024