உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை அப்போலோ டாக்டர் ரமேஷ் அட்வைஸ்

புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை அப்போலோ டாக்டர் ரமேஷ் அட்வைஸ்

புதுச்சேரி : ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது என, அப்போலோ மருத்துவமனை சிறப்பு மருத்துவர் ரமேஷ் தெரிவித்தார்.புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி என்.டி., மஹால் எதிரே அப்போலோ மருத்துவமனை மையம் அமைந்துள்ளது. இங்கு சென்னை அப்போலோ மருத்துவமனை சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் ரமேஷ் வருகை தந்து ஆலோசனை வழங்கினார்.அவர் கூறியதாவது: உலகம் முழுதும் ஆண்களின் மரணத்திற்கு இரண்டாவது பெரிய காரணமாக புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இந்தியாவிலும் இவ்வகை புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறிய பி.எஸ்.ஏ., பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முன்னோர்கள் புரோஸ்டேட் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.புரோஸ்டேட்டில் வீக்கம் காணப்படும். இது அடிக்கடி சிறுநீர் கழித்தல், மெதுவாக சிறுநீர் கழித்தல், ரத்த கசிவு போன்ற அறிகுறிகள் காணப்படும். சில சமயங்களில் புரோஸ்டேட் புற்றுநோய் முற்றிய நிலையில் எலும்புகளில் வலி ஏற்படும். சிறுநீரகம் செயலிப்பு நடக்கும். முதுகு எலும்பு அழுத்தப்படுவதால், உடலின் கீழ்பகுதியை இயக்குவதில் சிரமம் ஏற்படும். ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் புரோஸ்டேட் புற்றுநோயை எளிதில் குணமாக்க முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை