உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கல்

புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில், மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். இணை இயக்குநர் சிவகாமி, முதன்மை கல்வி அதிகாரி மோகன், வட்ட ஆய்வாளர்கள் சொக்கலிங்கம், 2, 3 மற்றும் 4வது வட்ட அதிகாரிகள் லிங்குசாமி, லீமாஸ், குணசுந்தரி பங்கேற்றனர்.பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பெல்ட், அடையாள அட்டை, விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சீனுவாசன், ஆசிரியர்கள் விஜயலட்சுமி, முத்தரசி, பானுப்பிரியா, ராஜேஷ்வரி, லாவண்யா, நிர்மலா, இரிசம்பாள் மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர். பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி