மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கல்
14-Sep-2024
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் ஜூலியன் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.பள்ளி தலைமையாசிரியர் பூங்குன்றன், பள்ளி நுாலகர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் வசுமதி நன்றி கூறினார்.
14-Sep-2024