மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி ஊர்காவல் படை வீரர்கள் தேர்வுகள் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.புதுச்சேரி காவல் துறையில் ஊர்காவல் படை வீரர்கள்-500 (ஆண்கள்-420, பெண்-80) தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான உடல் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற 3,034 ஆண் தேர்வர்களும், 1,195 பெண்கள் எழுத்துதேர்வுக்கு தகுதி பெற்றனர்.அவர்களுக்கான எழுத்துதேர்வு கடந்த 30ம் தேதி, நடந்தது. தேர்வை ஆண்கள் 2,908 பேர், பெண்கள் 1,111 பேர் எழுதினர்.இந்நிலையில் நேற்று நள்ளிரவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி ஆண்கள் பிரிவில் காரைக்கால் சுந்தரேசன் 87.50 மதிப்பெண் பெற்று முதலிடம், காரைக்கால் சூரியா, புதுச்சேரி ரமணா தலா 86.50 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், 86.25 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி கமலக்கண்ணன் 3வது இடம் பிடித்தனர்.பெண்களில் புதுச்சேரி சுபஸ்ரீ 82.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், 82.50 மதிப்பெண்கள் பெற்று பவதாரணி இரண்டாமிடம், 81.50 மதிப்பெண்கள் பெற்று சிந்துஜா 3ம் இடம் பிடித்தனர். மேலும் காத்திருப்போர் பட்டியலும் புதுவை அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
11 hour(s) ago
11 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago