| ADDED : ஜூலை 25, 2024 05:28 AM
புதுச்சேரி: தோட்டக்கலை பயிர் செய்யும் தகுதியான விவசாயிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தோட்டக்கலை மற்றும் புதுச்சேரி மாநில தோட்டக்கலை வளர்ச்சி சங்கத்தின் கீழ் புதிய பழத்தோட்டம் அமைத்தல், பாரம்பரிய மலர்கள், திசுவாழை, கட்டை வாழை, வீரிய ஒட்டு ரக காய்கறிகள் பயிர் செய்வோர், மூடாக்குகள் பயன்படுத்தும் விவசாயிகள்,பின்செய் மானியம் கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியான விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சம்மந்தபட்ட உழவர் உதவியகம் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 5ம் தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.