உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி - அரும்பார்த்தபுரம் பை பாஸ் சாலை பணி விறுவிறுப்பு

புதுச்சேரி - அரும்பார்த்தபுரம் பை பாஸ் சாலை பணி விறுவிறுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி - அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் முதல் இந்திரா சிக்னல் வரை தற்போது உள்ள சாலையை அகலப்படுத்த முடியவில்லை. குறுகிய சாலையில் ஏற்படும் வாகன நெரிசலை சமாளிக்க, நுாறடிச்சாலை மேம்பாலம் ஜான்பால் நகரில் துவங்கி, அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் வரை 4.5 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க கடந்த 15 ஆண்டிற்கு முன்பு நிலம் கையப்படுத்தும் பணி துவங்கியது.28 மீட்டர் அகலத்திற்கு செம்மண் கொட்டி, அதில் 22 மீட்டர் அகலத்திற்கு தார் சாலையும், 7 இடங்களில் சிறிய வாய்க்கால் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.நில ஆர்ஜிதம் பணியால் பல ஆண்டுகள் ஜவ்வாக இழுத்து வந்த இப்பணியை மேற்கொள்ள ஹெட்கோவில் ரூ. 30 கோடி கடன் பெறப்பட்டது. ரூ. 22 கோடியில் திட்ட அனுமதி அளிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால் மழை, நிர்வாக காரணங்களால் மேலும் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் திட்ட மதிப்பு ரூ. 30 கோடியாக உயர்ந்தது.புறவழிச்சாலை பணி கடந்த பிப். மாதம் மீண்டும் துவங்கியது. செம்மண் கருங்கல் ஜல்லி கொட்டி சமன்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் கூறுகையில்; பொதுபணித்துறை நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்ட அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பணி வேகமாக நடந்து வருகிறது.வரும் ஜூன் மாதத்திற்கள் சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ