உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மீண்டும் சதம் அடித்த வெயில்; 101.8 டிகிரி பதிவு

புதுச்சேரியில் மீண்டும் சதம் அடித்த வெயில்; 101.8 டிகிரி பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று வெயில் மீண்டும் சதம் அடித்து, 101.8 டிகிரியாக பதிவானது.புதுச்சேரியில் கோடை காலமான மார்ச், ஏப்., மே மாதங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது. ஜூன் மாதம் துவங்கியதும் சில நாட்கள் மழை பெய்ததால், வெப்பம் சற்று தணிந்தது. வெயில் குறைந்தது என மக்களும் நிம்மதி அடைந்தனர்.இந்நிலையில் நேற்று வெப்பம் அதிகரித்தது. சுற்றுலா தளங்களில் பகல் நேர மக்களின் கூட்டம் குறைந்து இருந்தது. மாலை நேரத்தில் கடற்கரை, சின்ன வீராம்பட்டினம், பேரடைஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று புதுச்சேரியில் வெப்ப நிலை 101.8 டிகிரி பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை