உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி டாக்டர் கவுரவிப்பு 

புதுச்சேரி டாக்டர் கவுரவிப்பு 

புதுச்சேரி: தென்னிந்திய எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர்கள் சங்க மாநாட்டில், புதுச்சேரி டாக்டர் கிருஷ்ணகுமார் கவுரவிக்கப்பட உள்ளார்.தென்னிந்தியாவின் 6 மாநிலங்களைச் சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர்கள் மாநாடு, கேரள மாநிலம் பாலக்காட்டில், வரும் 30ம் தேதி துவங்கி, செப்டம்பர் 1ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5,000 டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர்.மாநாட்டில் 6 மாநிலங்களில் இருந்தும் மாநிலத்துக்கு ஒரு சீனியர் டாக்டர் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர். இதில், புதுச்சேரியை சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் கிருஷ்ணகுமார் புதுச்சேரி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், வரும் 30ம் தேதி மாலை பாலக்காட்டில் மற்ற ஐந்து மாநில சீனியர் டாக்டர்களுடன் சேர்ந்து கவுரவிக்கப்பட உள்ளார்.டாக்டர் கிருஷ்ணகுமார் புதுச்சேரி மாநில அரசு டாக்டர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் தலைவராகவும், இந்திய மருத்துவ சங்கத்தின் புதுச்சேரி கிளையின் தலைவர் மற்றும் செயலாளராகவும் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்