மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
13 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
13 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, காலாப்பட்டு தொகுதியில், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ., காங்., மூன்று கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் தலைமையின் வற்புறுத்தலின் பேரில் காங்., பா.ஜ., வேட்பாளர்கள் தேர்தலில் நிற்கின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன் மாநிலத்தின் உரிமையை மீட்டெடுக்கவும், புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்காகவும் தேர்தலில் நிற்கிறார்.பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் ஒரு மாத காலமாக எங்கேயோ பதுங்கு குழியில் பதுங்கியிருந்தார். விருப்பம் இல்லாமல் போட்டியிடும் அவருக்கு ஓட்டுபோடுவது தேவையற்றது . இதை மக்கள் உணர்ந்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தும் ஒரு சோதனை எலியாக புதுச்சேரி மாநிலம் உள்ளது. அதே போன்று புதுச்சேரி மாநிலத்தை சோதனை எலி போன்று காலாப்பட்டு தொகுதி உள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய இரண்டு மூன்று ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் கொளுத்தும் வெயிலிலும் பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்கிறார்.நமச்சிவாயம் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராக வருவார் என்று முதலமைச்சர் கூறுகிறார். அவ்வாறு அவர் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பத்து தினங்களுக்குள் புதுச்சேரி மாநிலத்தில் முதல்வரை மாற்றம் செய்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார். என்.ஆர்.காங்., உண்மை தொண்டர்கள் உணர்ந்து பா.ஜ.., வுக்கு வாக்களிக்காமல் அ.தி.மு.க., வுக்கு வாக்களிக்க வேண்டும்.மீண்டும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் கூறுகிறார். 5 ஆண்டுகாலம் எம்.பி.,யாக இருந்து மாநிலத்திற்கு செய்த நன்மைகள் என்ன, புதுச்சேரி மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான மாநில அந்தஸ்து உள்ளிட்ட எதையாவது இவர் செய்துள்ளாரா, என்பதை உணர்ந்து வாக்காளர்கள் படித்த இளைஞர்கள் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மீனவ குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
13 hour(s) ago
13 hour(s) ago