உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இருளில் மூழ்கி கிடக்கும் ராஜிவ் சிக்னல் இ.சி.ஆர்., பிரிலெப்டில் விபத்து அபாயம்

இருளில் மூழ்கி கிடக்கும் ராஜிவ் சிக்னல் இ.சி.ஆர்., பிரிலெப்டில் விபத்து அபாயம்

புதுச்சேரி : புதுச்சேரி ராஜிவ் சிக்னலில் ைஹமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடப்பதால் முருகா தியேட்டர் - இ.சி.ஆர்., பிரிலெப்டில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பாக ராஜிவ் சிக்னல் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிக்னலில் இ.சி.ஆரில் ைஹமாஸ் விளக்கு கடந்த 2.5 மாதமாக எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுதும் கும்மிருட்டில் மூழ்கி கிடக்கிறது. குறிப்பாக, முருகா தியேட்டரில் இருந்து பிரிலெப்டில் இ.சி.ஆரில் திரும்பும் வளைவில் உள்ள ைஹமாஸ், தடுப்பு கட்டையில் உள்ள 15 மின் விளக்குகள் 40 மீட்டர் தொலைவிற்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.இதனால் முருகா தியேட்டரில் இருந்து இ.சி.ஆரில் திரும்பும் வாகனங்கள், இருள் சூழ்ந்த பஸ்டாப்பில் பயணிகள் காத்திருப்பது தெரியாமல் மோதும் அபாயம் உள்ளது.இந்த இடத்தில் கொஞ்சம் வாகன ஓட்டிகள் கவனம் சிதறினாலும், பஸ்சுக்காக காத்திருக்கும் அப்பாவி மக்கள் மீது மோதி, உயிரிழப்பு சம்பவம் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இதேபோல் வளைவில் திரும்பும்போது தடுப்பு கட்டையில் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.இ.சி.ஆர்., தான் வி.ஐ.பி.,க்களின் சாலையாக உள்ளது. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இவ்வழியாக தான் செல்கின்றனர். தலைமை செயலர், அரசு செயலர்கள் இந்த வழியாக தான் தங்களுடைய அலுவலங்களுக்கு தினமும் சென்று வருகின்றனர். அப்படி இருக்கும்போது இ.சி.ஆர்., இருளில் மூழ்கி கிடப்பது ஒருவர்கூட கண்ணுக்கு தெரியவில்லையா என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. பெரிய விபத்து ஏற்பட்டு விபரீதம் நடப்பதற்கு முன், இ.சி.ஆரில் உள்ள ைஹமாஸ், சென்டர் மீடியன் தெருவிளக்கு அனைத்தையும் எரிய செய்வதற்கு முதல்வர் ரங்கசாமி, மின் துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் இ.சி.ஆரில் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !