உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியாங்குப்பத்தில் பேனர்கள் அகற்றம்

அரியாங்குப்பத்தில் பேனர்கள் அகற்றம்

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பகுதியில் அரசியல் கட்சியினரின் பேனர்கள், திருமணம் நிகழ்ச்சிகளின் பேனர்கள், இறந்தவர்களின் அஞ்சலி பேனர்களை தொடர்ந்து முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. அதனால், போக்குவரத்து இடையூறுகள் மற்றும், வாகனத்தில் செல்பவர்கள் கவனம் சிதறல்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.பேனர்களை அகற்ற தொடர்ந்து அரியாங்குப்பம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதையடுத்து, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் நேற்று அரியாங்குப்பம் புறவழிச்சாலை, சிக்னல் பகுதியில் இருந்த பேனர்களை போலீசார் அதிரடியாக அகற்றினர். மேலும், முக்கிய இடங்களில் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி