உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் நிலத்தில் கட்டப்பட்ட சுற்று சுவர் அகற்றம்

கோவில் நிலத்தில் கட்டப்பட்ட சுற்று சுவர் அகற்றம்

புதுச்சேரி ' புதுச்சேரி, காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் ரெயின்போ நகர், 7 வது குறுக்கு தெருவில் உள்ளது. ரூ.50 கோடிக்கு மேல் மதிப்புள்ள இந்த இடத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்துவிட்டதாக சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு புகார் வந்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதில் 31 ஆயிரத்து 204 சதுர அடி நிலத்தைசென்னையை சேர்ந்த ரத்தினவேல், அவரது மனைவி மோகனசுந்தரி, மனோகரன், புதுவையை சேர்ந்த சின்னராசு மற்றும் சிலர் போலிஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்து மனைகளாக பிரித்து விற்றது தெரிந்தது.சி.பி.சி.ஐ.டி.., போலீசார் விசாரித்து சார்பதிவாளர் சிவசாமி,அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டாமாற்றம் செய்த தாசில்தார் பாலாஜிஉட்பட 17 பேரை கைது செய்தனர். கோவில் நிலத்தை மனைப்பிரிவாக மாற்றி பதிவு செய்துள்ள பத்திரங்கள் மற்றும் மனை வாங்கியுள்ள அனைவரின் கிரய பத்திரத்தையும் ரத்து செய்து நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.விற்பனை பத்திரம் ரத்து செய்யப்பட்டு, கோவில் நிலம் காமாட்சியம்மன் கோவில் நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட இடத்தில் உள்ள சுற்று சுவரை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. கால அவகாசம் முடிந்ததால், கோவில் நிர்வாகத்தினர் ஜே.சி.பி., மூலம் சுற்று சுவரை இடித்து அகற்றினர்.

2 வீடுகளுக்கு கெடு

கோவில் நிலத்தில் முழுமையாக ஒரு வீடும், பகுதியாக மற்றொரு வீடும் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளையும் அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. இரு வீடுகளையும் காலி செய்ய நோட்டீஸ் ஏற்கெனவே தரப்பட்டுள்ளது. இரு வீட்டினரும் வடக்கு சப் கலெக்டரிடம் மூன்று மாதம் அவகாசம் கேட்டு மனு கொடுத்தனர். கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ