உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலிதீர்த்தாள்குப்பம் அரசு பள்ளியில் ரூ.66.89 லட்சம் செலவில் புனரமைப்பு

கலிதீர்த்தாள்குப்பம் அரசு பள்ளியில் ரூ.66.89 லட்சம் செலவில் புனரமைப்பு

திருபுவனை : கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேதம் அடைந்த வகுப்பறைக் கட்டடங்களை ரூ.66.89 லட்சம் செலவில் புனரமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று துவக்கிவைத்தார்.புதுச்சேரி அரசு சிறப்புக்கூறு நிதியின் மூலம் திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதம் அடைந்த மிகவும் பழமையான வகுப்பறைக் கட்டடங்கள் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.66.89 லட்சம் செலவில் புனரமைக்கு பணிகள் துவங்கியது.இதற்கான பூமி பூஜை விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை 2ம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், இரண்டாவது கோட்ட சிறப்பு கட்டட கண்காணிப்பு பொறியாளர் சுப்பராயன், உதவிப்பொறியாளர் விக்டோரியா, இளநிலைப் பொறியாளர் கருணாகரன், பள்ளி துணை முதல்வர் பாக்கியலட்சுமி, தலைமையாசிரியை பிருந்தாதேவி, ஒப்பந்ததாரர் முத்து கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை