உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதாரத்துறை இயக்குநர் பதவியை நிரப்ப கோரிக்கை

சுகாதாரத்துறை இயக்குநர் பதவியை நிரப்ப கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை; கொல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுதும் டாக்டர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், ஜிப்மர் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற இக்கட்டான சூழலில் புதுச்சேரி மாநில சுகாதார துறை இயக்குநர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.இதற்கு முன் இருந்த இயக்குநர் பதவிக்காலம் கடந்த, 14ம் தேதி முடிவுற்ற நிலையில் இப்போது வரை அந்த பதவி நிரப்பப்படவில்லை. குரங்கு அம்மை நோய் பரவல், மருத்துவ மாணவர் சேர்க்கை போன்ற அத்தியாவசிய பணிகள் சுகாதாரத்துறை இயக்குனர் பதவிக்கு உள்ளது.அதனால் முதல்வர் ரங்கசாமி மிக முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரத்துறை இயக்குநர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஒதுக்காமல் உடனடியாக, தனி இயக்குநர் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை