மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
22 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
22 hour(s) ago
காரைக்கால்: காரைக்காலில் நடந்த பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டத்தில், வேட்பாளர் நமச்சிவாயத்தை வெற்றி பெற செய்ய தீவிரமாக ஓட்டு சேகரிப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, காரைக்காலில் தனியார் திருமண மண்டபத்தில், பா.ஜ., சார்பில், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. பா.ஜ., தேசிய பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.எல்.ஏ., பா.ஜ., மாநில துணை தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.கூட்டத்தில், காரைக்காலில் உள்ள நெடுங்காடு, திருப்பட்டினம், நிரவி, காரைக்கால் வடக்கு, தெற்கு, திருநள்ளாறு உள்ளிட்ட ஐந்து சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். பா.ஜ., திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துக் கூறி, தாமரை சின்னத்திற்கு தீவிரமாக ஓட்டு சேகரிக்க வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் பா.ஜ., மாநில துணை தலைவர் கணபதி, அருள்முருகன், வி.கே.,கணபதி, டாக்டர் விக்னேஸ்வரன், அமுதராணி, விக்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.
22 hour(s) ago
22 hour(s) ago