உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபசார வழக்கில் தேடப்பட்ட ரவுடி கோவாவில் கைது

விபசார வழக்கில் தேடப்பட்ட ரவுடி கோவாவில் கைது

அரியாங்குப்பம் : புதுச்சேரி உப்பளம் சாலையில் தனியார் விடுதி ஒன்றில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து, முதலியார்பேட்டை போலீசார், கடந்த பிப்ரவரி மாதம் விடுதியில் சோதனை நடத்தினர். அங்கு, வெளி மாநிலத்தை சேர்ந்த இரு அழகிகளை வைத்து விபசாரம் நடந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.போலீசார், அழகிகளை மீட்டு, பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரணை செய்ததில், சண்முகாபுரத்தை சேர்ந்த பாலாஜி, 35; என்பவர் அழகிகளை அழைத்து வந்து, வாணரப்பேட்டை சேர்ந்த ரவுடியான அய்யப்பனிடம் ஒப்படைத்து வந்தது தெரியவந்தது.இவர் மூலம், வில்லியனுார் ஆரியப்பாளையம் மணிகண்டன், 37; விடுதியில் விபசாரம் நடத்தியது தெரியவந்ததது. அதையடுத்து, விடுதி மேலாளர் சின்னமுதலியார்சாவடியை சேர்ந்த முத்தமிழன், 30; உப்பளம் அவ்வை நகரை சேர்ந்த தினேஷ், 38; ரெட்டியார்பாளையம் லோகேஷ், 25; ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.இதில், முக்கிய குற்றவாளியான ரவுடி அய்யப்பன் தலைமறைவானர். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.இந்நிலையில், கோவாவில் பதுங்கிருப்பதாக வந்த தகவலையடுத்து, கோவா போலீசார் உதவியுடன், அய்யப்பனை நேற்று முன்தினம், முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்