புதுச்சேரியில் ரூ.13.51 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை
புதுச்சேரி, : பங்கு சந்தையில், முதலீடு செய்தால் பணம் சம்பாதிக்காலம் என 13.51 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவரை தொடர்பு கொண்ட நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, படிப்படியாக, பணத்தை முதலீடு செய்தார். அதற்கான லாபம் அவருக்கு கிடைத்து வந்தது.அந்த ஆசையில் அவர், மேலும், 13.51 லட்சம் ரூபாயை பங்கு சந்தையில் முதலீடு செய்தார். அதனை தொடர்ந்து, முதலீடு செய்ததற்கான லாப பணம் வராததால், சந்தேகமடைந்த, அவர் அந்த நபரை தொடர்பு கொண்ட போது, அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கததால், மோசடி நபரிடம் ஏமாந்தது தெரியவந்தது.புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.