உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க., பிரமுகரிடம் ரூ.27 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

அ.தி.மு.க., பிரமுகரிடம் ரூ.27 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

புதுச்சேரி : பஸ் 'பர்மிட்' தருவதாகக்கூறி, அ.தி.மு.க பிரமுகரிடம், ரூ.27 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி, ரெயின்போ நகரை சேர்ந்தவர் கருணாநிதி, 57. அ.தி.மு.க பிரமுகர். மதுபானக்கடை நடத்தி வருகிறார். இவர் முத்தியால்பேட்டை, வசந்தம் நகர், வாகை வீதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி தனம் ஆகியோரிடம் நட்பு ரீதியில் பழகி வந்தார். இந்த நிலையில், வெங்கடேசன் தன்னிடம் பஸ் 'பர்மிட்' இருப்பதாகவும், ரூ.27 லட்சம் கொடுத்தால் அதை வழங்குவதாகவும் கருணாநிதியிடம் கூறினார். இதை நம்பி, அவரும் பல தவணையாக வெங்கடேசனிடம், முழு பணத்தையும் கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு, பஸ் 'பர்மிட்' வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, கருணாநிதி விசாரித்த போது, பஸ் 'பர்மிட்' வெங்கடேசனின் தந்தை பெயரில் இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த கருணாநிதி, உடனே பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். அப்போது அவரிடம் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி தனம் ஆகிய இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பெரியக்கடை போலீசில் கருணாநிதி புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இருவர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி