உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பறக்கும் படை சோதனையில் ரூ.3.47 கோடி சிக்கியது

பறக்கும் படை சோதனையில் ரூ.3.47 கோடி சிக்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.3.47 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி எல்லை பகுதிகளில் போலீசார் உதவியுடன், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் ஜிப்மர் எல்லையில் தேர்தல் துறை பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்புவதற்காக வந்த சி.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்தின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பணம் இருப்பது தெரிய வந்தது. அதற்கான ஆவணத்தின் தேதி மாறி இருந்ததால், சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை புதுச்சேரியில் உள்ள கணக்கு மற்றும் கருவூலக அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அதில், இருந்த 3 கோடியே 47 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் மணிமாறன் மற்றும் உடன் வந்த ஈஸ்வர தாஸ் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி