மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
வடலுார் : ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் மனைவி சரஸ்வதி,45; இவர், கடந்த 25ம் தேதி உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக பண்ருட்டியில் உள்ள தனது சகோதரியிடம் கம்மல், செயின் உள்ளிட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான 12 சவரன் நகைகளை வாங்கிக் கொண்டு வடலுாருக்கு தனியார் பஸ்சில் புறப்பட்டார்.பஸ் வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம் அருகே வந்தபோது, சரஸ்வதி கைப்பையில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் வடலுார் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.ஓடும் பஸ்சில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago