உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிற்படுத்தப்பட்டோர் கழகத்தில் ரூ.12.91 லட்சம் மோசடி

பிற்படுத்தப்பட்டோர் கழகத்தில் ரூ.12.91 லட்சம் மோசடி

புதுச்சேரி : பிற்படுத்தப்பட்டோர் கழகத்தில் போலி கணக்கு எழுதி ரூ. 12.91 லட்சம் மோசடி செய்த, இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி வேல்ராம்பட்டு, நேத்தா நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன்,56; புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.கழகத்தின் சேர்மன் வாகனம், துறை செயலருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிய ரசீது, வவுச்சர் நோட், பே ஆர்டர் மற்றும் காசோலைகளில் உண்மையாக வழங்க வேண்டிய தொகைக்கு அப்போதைய நிர்வாக இயக்குநர் குமரனிடம் அனுமதி பெற்றார். பின்பு அந்த காசோலைகளில் வார்த்தை, எண்களை கூடுதலாக சேர்த்து வங்கியில் சமர்ப்பித்து கூடுதல் தொகை ரூ.12.91 லட்சத்தை தனது சொந்த பயன்பாட்டிற்கு செலவு செய்து வந்துள்ளார். இது கடந்த ஆண்டு மார்ச் முடிந்த தணிக்கை அறிக்கையில் தெரியவந்தது.இதுகுறித்து நிர்வாக இயக்குநர் ராகினி அளித்த புகாரை தொடர்ந்து எஸ்.பி., மோகன்குமார் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிந்து, முருகேசனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி