உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை துவக்கம் வாடகை படகில் சென்று போலீஸ் சோதனை 

சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை துவக்கம் வாடகை படகில் சென்று போலீஸ் சோதனை 

புதுச்சேரி : தீவிரவாத ஊடுருவல்களை முறியடிக்கும் சாகர் கவாச் என்ற 2 நாட்கள் கடலோர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரியில் நேற்று துவங்கியது.இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் நேற்று காலை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை துவங்கியது.கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். காலாப்பட்டு, வீராம்பட்டினம் உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களில் சந்தேகப்படும் படி கடல் வழியாக வரும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தினர். ரோந்து படகு பழுதால் கடந்த ஓராண்டாக கடலோர போலீசார், கோஸ்ட் கார்டு படகுகளில் லிப்ட் கேட்டு சென்று தாங்களும் ரோந்து செல்வதாக பதிவு செய்து வருகின்றனர். சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகைக்கு ரோந்து செல்ல வேண்டும் என்பதால் சுற்றுலா பயணிகள் கடலுக்கு அழைத்து செல்லும் மீன்பிடி விசைப்படகு ஒன்றை 2 நாள் வாடகைக்கு எடுத்து, கடலில் சென்று மீன்பிடி படகுகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு படகில் வந்த மீனவர்களிடம் அடையாள அடைகள் ஏதும் இல்லை. கரை திரும்பியதும், கடலோர போலீஸ் நிலையத்தில் ஆஜராகி அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என தெரிவித்து விட்டு ஆய்வு பணியை தொடர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை