உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகாவீரர் ஜெயந்தியில் இறைச்சி, மது விற்பனை

மகாவீரர் ஜெயந்தியில் இறைச்சி, மது விற்பனை

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையோர கடைகளில் இறைச்சி விற்பனையும், கள்ள சந்தை யில் மதுபான விற்பனையும் நடந்தது.மகாவீரர் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரியில் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என நகராட்சிகள், கொம்யூன்கள் அறிவித்திருந்தன. இதையொட்டி, பெரிய மார்க்கெட்டில் உள்ள மீன் அங்காடி, மூடப்பட்டு வெறிச்சோடி கிடந்தது.ஆனால், நேற்று சாலை யோர இறைச்சி கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன.இறைச்சி விற்பனை ஜரூராக நடந்தது. மீன் மார்க்கெட்டுகளின் வெளி யிலும், சாலையோரங்களிலும், மீன் விற்பனை நடந்தது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், மக்கள் ஆர்வமுடன் இறைச்சி, மீன்களை வாங்கி சென்றனர்.இதனிடையே, மகாவீர் ஜெயந்தி என்பதால், மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டிருந்தது.ஆனால், நேற்று சில இடங்களில், கள்ளத்தனமாக மது விற்பனை நடந்தது. விலையை உயர்த்தி மது வகைகளை குடிமகன்கள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ