உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

புதுச்சேரி: மணவெளி அரசு தொடக்கப் பள்ளியில்மரக்கன்றுகள் நடும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.பள்ளி தலைமையாசிரியை சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ஆசிரியை நித்தியா வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக கல்வியாளர் காந்திமதி பரிமால் கலந்து கொண்டு குழந்தைகளின் தன்மை, கல்வி கற்கும் முறை குறித்து பெற்றோர்களுக்கு விளக்கினார். ஆசிரியை எழிலரசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.விழாவில், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ