உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரக்கன்று நடும் விழா...

மரக்கன்று நடும் விழா...

புதுச்சேரி: காலாப்பட்டு பரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித்திட்டம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.பள்ளியின் துணை முதல்வர் சாந்தாதேவி தலைமை தாங்கினார். ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். சமுதாய நலப்பணித்திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் நோக்கவுரை ஆற்றினார். சூழலியல் செயற்பாட்டாளர் பாலகங்காதரன் காடுகள் பாதுகாப்பதின் அவசியத்தை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.தொடர்ந்து, வனங்களின் பாதுகாப்பு குறித்து மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். மாணவிகளுக்கு காடுகளின் பாதுகாப்பு என்ற தலைப்பில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி சமுதாய நலப்பணித்திட்ட ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். மாணவி சக்திஷா தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை