மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி : சாரதா கங்காதரன் கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. சாரதா கங்காதரன் கல்லுாரி, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற இணைப்பு கல்லுாரி ஆகும். தற்போது ஒன்பது இளங்கலை மற்றும் நான்கு முதுகலை பட்டப்படிப்புகளில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உயர்கல்வி படிக்கின்றனர்.சாரதா கங்காதரன் கல்லுாரி பல்கலைக்கழக மானியக் குழுவால் யு.ஜி.சி., அங்கீகரிக்கப்பட்ட 2 எப். அந்தஸ்து பெற்றுள்ளது. கடந்த 2021ல் புதுச்சேரி பல்கலைக்கழகத்தால் இளங்கலை வணிகவியல் துறை நிரந்தர அங்கீகாரம் பெற்றுள்ளது. இக்கல்லுாரி ஐ.எஸ்.ஒ., 9001: 2015 தரச் சான்றிதழ் பெற்ற உயர்கல்வி நிறுவனம். கல்லுாரியின் இளங்கலை கணினி பயன்பாட்டுவியல் பி.சி.ஏ., துறை மற்றும் இளங்கலை மேலாண்மை பி.பி.ஏ., துறை, தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. (AICTE) சாரதா கங்காதரன் கல்லுாரியில் நுண் கலைத்திறன், விளையாட்டு மற்றும் வேலை வாய்ப்புகளில் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.இக்கல்லுாரியில் 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை இணையதளம் மற்றும் நேரடியாகவும் நடக்கிறது. உயர்கல்வி பயில விருப்பமுள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தை www.sgc.edu.inஎன்ற இணையதளம் மூலம் பார்த்து தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0413 -2280156, 9361678999 எண்ணிலும், sgc.edu.inஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago