உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கனுார் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

திருக்கனுார் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

திருக்கனுார் : திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., வீரவல்லவன் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.புதுச்சேரி டி.ஜி.பி., சீனிவாஸ் உத்தரவின் பேரில், வடக்கு பகுதி எஸ்.பி., வீரவல்லவன் நேற்று முன்தினம் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு, திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார். இதில், 2023 ம் ஆண்டின் நிர்வாகம் மற்றும் குற்ற வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தார்.தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பணியில் இருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில், பொதுமக்கள் கூறிய பல்வேறு புகார்களை, அந்தந்த துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். ஆய்வின் போது, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை