மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி : போக்குவரத்து துறை சார்பில் பள்ளி கல்லுாரி வாகனங்கள் ஆய்வு முகாம் 2வது நாளாக நேற்று நடந்தது. முகாமில் பங்கேற்ற 87 வாகனங்களில் 80 வாகனங்களுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டது.பள்ளி கல்லுாரி வாகனங்களில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மோட்டார் வாகன சட்டம், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை பள்ளி கல்லுாரி வாகனங்கள் பின்பற்றுகிறதா என்பதனை அந்தந்த மாநில போக்குவரத்து துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்கிறது.அதன்படி புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் பள்ளி கல்லுாரி வாகனங்களின் ஆய்வு முகாம், மேட்டுப்பாளையம் கனரக வாகன முணையத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. புதுச்சேரியில் 800, காரைக்காலில் 50, மாகி 25, ஏனாமில் 25 என மொத்தம் 900 வாகனங்கள் உள்ளன. இதில், நேற்று முன்தினம் நடந்த முகாமில் 387 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டது. உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகள்படி, முதல் உதவிப்பெட்டி, அவசர காலவழி, தீயணைக்கும் கருவி, வேககட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ்., உள்ளிட்ட 16 விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கின்றனர். முதல் நாள் ஆய்வில் 370 வாகனங்களுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டது. நேற்று 87 வாகனங்கள் மட்டுமே ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டது. இதில், 80 வாகனங்கள் பயன்படுத்த போக்குவரத்து துறை அனுமதி சான்றிதழ் கொடுத்தது. முகாமிற்கு கொண்டுவரப்படாத வாகனங்களை அந்தந்த பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
12 hour(s) ago
12 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago