உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு பள்ளி கல்வித் துறை உத்தரவு

தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு பள்ளி கல்வித் துறை உத்தரவு

புதுச்சேரி: ஒன்பதாம் வகுப்பு, பிளஸ்1 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி கல்வித் துணை இயக்குனர் சிவகாமி அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை;2023 - 24ம் கல்வியாண்டிற்கான ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 உள்ளிட்ட வகுப்புகளுக்கு அரசுப் பள்ளிகளால் தயாரிக்கப்பட்ட தேர்ச்சி பட்டியல், தகுதி வாய்ந்த அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.தேக்கம் மற்றும் இடைநிற்றலைத் தவிர்க்க உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம், பிளஸ் 1 வகுப்பில் மூன்று பாடங்களுக்கு மிகாமல் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதன் மூலம் மற்றொரு வாய்ப்பை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.எனவே, புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் மண்டலங்களில் 9ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மறுதேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் மற்றும் பாடங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். மறு தேர்வு அட்டவணையும் பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.தேர்வு மற்றும் மதிப்பீடு வரும் 9ம் தேதி முதல் அந்தந்த பள்ளியில் நடத்தப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பிறகே முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். தேர்ச்சி பெற்ற மாணவர்களை உடனடியாக 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் சேர அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ