உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரம் விழுந்து ஸ்கூட்டி சேதம்

மரம் விழுந்து ஸ்கூட்டி சேதம்

காரைக்கால் : பழமைவாய்ந்த மரம் வேருடன் சாய்ந்து ஸ்கூட்டர் சோதமடைந்தது. காரைக்கால் மாமாதம்பி மரைக்காயர் வீதியில் உள்ள மரம் ஒன்று நேற்று வேருடன் சாய்ந்தது.இதில் மரத்தில் கீழே நிறுத்தியிருந்த ஸ்கூட்டி மீது மரம் விழுந்ததால் ஸ்கூட்டி சேதமடைந்தது. மேலும் மரம் விழுந்ததால் அப்பகுதியில் உள்ள மின்கம்பம் மற்றும் கேபிள்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது. அந்த நேரத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.தகவல் அறிந்த நகராட்சி மற்றும் மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தையும் மின் கம்பிகளையும் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ