| ADDED : ஏப் 09, 2024 05:01 AM
அரியாங்குப்பம்: நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில், துவக்க பள்ளி மாணவர்களுக்கு, சாரணர் இயக்கத்தின் சார்பில், குருளையர் மற்றும் நீலப்பறவைகளுக்கான முகாம் நடந்தது. முகாமை, பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். ஆசிரியை இந்திராகாந்தி வரவேற்றார். காலாப்பட்டு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராமகிருஷ்ணன், புரபஷர் அன்னு சாமி மேல் நிலைப்பள்ளி ஆசிரியை இளவரசி ஆகியோர், குருளையர் மற்றும் நீலம் பறவைகள் குறிக்கோள், உறுதிமொழி, சட்டம் ஆகியவை குறித்து விளக்கிக் கூறினர்.சாரண இயக்கப்பாடல்கள், கைத்தட்டல்கள், முடிச்சுகள் போடுதல், முதலுதவி, விளையாட்டுகள் முகாமில் விளக்கப்பட்டது. நுண்கலை ஆசிரியர் சுகுமாறன் கைவினை பயிற்சி அளித்தார். தொடர்ந்து மாணவர்கள் நாடகம், படித்தல், பாடல், குழு நடனம், போன்ற திறமைகளை வெளிப்படுத்தினர். முகாமில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்.