சிலம்பம் தற்காப்பு கலை சங்கத்தில் தேசிய போட்டிக்கான வீரர்கள் தேர்வு
புதுச்சேரிபுதுச்சேரி மாநில அடிமுறை மற்றும் சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பில் சிறப்பு பயிற்சி மற்றும் தேசிய போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது. பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி முகாமிற்கு மாநில சிலம்பம் தற்காப்பு கலை பொதுச் செயலாளர் அன்பு நிலவன் தலைமை தாங்கினார். கணபதி, வந்தியத்தேவன் சிலம்பாட்ட குழு தலைவர் விஜயகுமார் ஆகியோர் சிறப்பு பயிற்சி அளித்தனர்.முகாமில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில், புதுச்சேரி மாநில ஒலிம்பிக் சங்கத்தின் இணைச்செயலாளர் கராத்தே வளவன், பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். சங்க தலைவர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.இதில், தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரும் 29, 30 மற்றும் 31ம் தேதிகளில் கன்னியாகுமரியில் நடக்கும் தேசிய அளவிலான அடிமுறை மற்றும் சிலம்பம் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.