உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெள்ளாழர் வீதி சந்திப்பில் உடைந்த வாய்க்காலால் கழிவுநீர் தேக்கம்; கடும் துர்நாற்றத்தால் வியாபாரிகள் அவதி

வெள்ளாழர் வீதி சந்திப்பில் உடைந்த வாய்க்காலால் கழிவுநீர் தேக்கம்; கடும் துர்நாற்றத்தால் வியாபாரிகள் அவதி

புதுச்சேரி : காந்தி வீதி - வெள்ளாழர் வீதி சந்திப்பில் உடைந்து கிடக்கும் வாய்க்காலால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று கடும் துர்நாற்றம் வீசுகிறது. புதுச்சேரி வெள்ளாழர் வீதி - காந்தி வீதி சந்திப்பில் ஏராளமான வணிக வளாகம், கடைகள் உள்ளது. இச்சாலைகள் சந்திக்கும் பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு அதன் மீது சிமெண்ட் சிலாப் மூலம் மூடியுள்ளனர். வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிலாப்களில் பல உடைந்தும், மீதமுள்ளவை சரிவர மூடாமல் நீட்டிக் கொண்டு உள்ளது. உடைந்து கிடக்கும் சிலாப்களால் பாதி சாலை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் உடைந்து கிடக்கும் சிலாப் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாய்க்கால் சிலாப் உடைந்துள்ளதால், வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல முடியாமல் காந்தி வீதி, வெள்ளாழர் வீதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, வாய்க்காலை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி