உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிழல் இல்லா நாள் பெத்திசெமினார் பள்ளியில் ஏற்பாடு

நிழல் இல்லா நாள் பெத்திசெமினார் பள்ளியில் ஏற்பாடு

புதுச்சேரி: புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் சூரிய திருவிழா எனும் நிழல் இல்லா நாள் நிகழ்விற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிழல் இல்லா நாள் என்றால் என்ன, அது எங்கு, எவ்வாறு, எப்படி ஏற்படுகிறது. நிழல் இல்லாத நாளுக்கும் பருவ காலங்களுக்கும் தொடர்பு உண்டா, நிழல் இல்லா நாளில் நாம் கற்கும் அறிவியல் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிழல் இல்லா நாள் நிகழ்வு, புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உப்பளம் பெத்திசெமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கும் இந்நிகழ்வில் பாரதிதாசன் மகளிர் கல்லுாரி இயற்பியல் துறைத் தலைவர் மதிவாணன சிறப்புரையாற்றுகிறார்.நிகழ்வில் பங்கேற்க வருவோர் தொப்பி மற்றும் காலணி அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9443262773 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை